திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கார் - பைக் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
பலியான மூன்று பேரும் 3 மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் கார் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வடூவூர் நோக்கி பைக்கில் சென்றவர்கள் மீது எதிரே வந்த டவேரா கார் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பைக்கில் சென்றவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலியான மூன்று பேரும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.