கார்-ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்

கார்-ஆட்டோ மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் ஏழுமுறம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் தனது ஆட்டோவில் பயணிகளை அழைத்துக் கொண்டு தொரப்பள்ளி நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து மாக்கமூலா பகுதியில் வந்தபோது ஆட்டோ மீது கார் திடீரென மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் ராஜன் (வயது 59), தொரப்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆண்ட்ரியா (20), குனியல் சந்தோஷ் (28), சுதிஷ் குமார் (29) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் ராஜன், ஆண்ட்ரியா மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் லக்கா ரெட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்