வீ.மேட்டுப்பாளையம்
வீ.மேட்டுப்பாளையத்தில் விஜயநடராஜ் என்பவருக்கு சொந்தமான விதைப்பண்ணை உள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று தினம் இரவு 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று ஒரு தொழிலாளியின் வீட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டது. அதை கவனித்தவர்கள் உடனே வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். வெள்ளகோவில் தீயணைப்புத் துறை அலுவலர் வேலுச்சாமி தீயணைப்பு வீரர்களுடன் வந்து சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு கொண்டு போய் பத்திரமாக விட்டனர்.