அரசு பஸ்சை சிறைபிடித்துபள்ளி மாணவ- மாணவிகள் போராட்டம்

வையம்பட்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-04 20:03 GMT

வையம்பட்டி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பஸ் சிறை பிடிப்பு

வையம்பட்டியை அடுத்த குமாரவாடி ஊராட்சியில் உள்ள ஆனாங்கரைப்பட்டிக்கும் - குமாரவாடிக்கும் செல்லும் சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிக்கு பஸ்கள் செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளான பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ - மாணவிகள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து மாணவ -மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்