தலைகீழாக மாறிய தலைநகர்... வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்

தீபாவளியை கொண்டாட பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கானப்படுகின்றன.

Update: 2022-10-24 04:39 GMT

சென்னை,

தீபாவளியை கொண்டாட பல லட்சம் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி கானப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கடந்த இரு நாட்களில் அதிக அளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், கடைசி நாளில் மிக மிக குறைவான மக்களே ஊருக்கு சென்றனர்.

இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி கானப்பட்டது. அதேபோல சென்னை பூந்தமல்லி தற்காலிக பேருந்து நிலையமும் வெறிச்சோடி கானப்பட்டது. மேலும், சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கானப்பட்டன.

எப்போதும் பரபரப்புடன் கானப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி,எஸ்,டி,சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் போக்குவரத்து இன்றி கானப்படுகின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்