கவர்னரின் சில கருத்துக்களை ஏற்க முடியாது - செல்லூர் ராஜூ பேட்டி
கவர்னர் ஆர்.என்.ரவி பேசும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி பேசும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர் ஒரு கட்சியின் பிரதிநிதி போல ஒருசில நேரங்களில் பேசுகிறார். கவர்னர் - அரசு இடையேயான மோதலால் தமிழக மக்களின் நல்வாழ்வு பாதிக்கப்படும். கவர்னர் விவகாரத்தில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. கவர்னராக பேசுகிறாரா? அல்லது வேறு எங்கும் இருந்து அறிக்கை வருகிறதா? என தெரியவில்லை.
ஆளும் கட்சியினர் கவர்னர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்க முடியாது. கவர்னர் ஆளுங்கட்சி மோதலால் மக்களின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் 3ம் தலைமுறையாக அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார். மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு மக்களவை தேர்தலுக்கு வெற்றி படிக்கட்டாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.