தளி வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்

தளி வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணி மும்முரம்

Update: 2022-08-22 10:49 GMT

உடுமலை

உடுமலை அருகே பி.ஏ.பி. ஏழுகுளம் பாசனப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதையொட்டி, தளி வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குளங்கள்

உடுமலை அருகே ஏழுகுளம் பாசனம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டிகுளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய8குளங்கள் உள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தில்

திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த 8 குளங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தளி வாய்கால் மூலம் 130 ஏக்கர் பாசனப்பகுதிகளுக்கான நேரடி பாசனமும் உள்ளது. இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த 8 குளங்கள் மற்றும் நேரடி பாசனம்மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 76 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

குளங்களில் தண்ணீர் இருப்பு

தற்போது செங்குளம், கரிசல்குளம், தினைக்குளம், அம்மாபட்டி குளம் ஆகிய 4 குளங்களில் தண்ணீர் இல்லை. மீதி குளங்களில் சிறிதளவு மட்டும் தண்ணீர் உள்ளது. 11.55 அடி உயரம் உள்ள பெரியகுளத்தில் நீர் மட்ட உயரம்2.20அடியாக இருந்தது. 10அடி உயரம் கொண்ட ஒட்டுக்குளத்தில் 5.10அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. 7.5அடி உயரம் கொண்ட செட்டிகுளத்தில்1.50அடி உயரத்திற்கு தண்ணீரும், 10.33அடி உயரம் கொண்ட வளையபாளையம் குளத்தில் 6.50அடி உயரத்திற்கு தண்ணீரும்இருந்தது.

இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி பி.ஏ.பி.2-வது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதைத்தொடர்ந்து இந்த குளங்களுக்கும் அடுத்தடுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்த குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதையொட்டி திரூமூர்த்தி அணையில் இருந்து இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் தளி வாய்க்கால்மற்றும் கிளை வாய்க்கால்களில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் குவிந்துள்ள மண்ணை அப்புறப்படுத்தியும், சுத்தம் செய்யும் பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்