சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 19:54 GMT

சூரமங்கலம்:

,சேலம் வந்த தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட ெரயில் பெட்டியில் இருந்த பை ஒன்றில் 8 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போது, பை கொண்டு வந்த நபர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பதும் இவர் ஆந்திர மாநிலத்திற்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது, உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்