கஞ்சா விற்றவர் கைது

சிவகாசியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-25 19:11 GMT

சிவகாசி, 

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 48). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தங்கபாண்டி, அசோக்கிடம் படிக்கும் மாணவனுக்கு ஏன் கஞ்சா வினியோகம் செய்கிறாய்? என கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அசோக், தங்கபாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கபாண்டி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்