குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த கஞ்சா பொட்டலங்கள்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த சுமார் 15 கிேலா கஞ்சா பொட்டலங்களை விருதுநகரில் ரெயில்வே போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
விருதுநகர்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த சுமார் 15 கிேலா கஞ்சா பொட்டலங்களை விருதுநகரில் ரெயில்வே போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை விருதுநகர் ரெயில் நிலையம் வந்தது. ரெயில் நின்றதும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் போலீசார் சோதனையிட்டனர்.
எஸ்-1 எண் பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. போலீசார் அந்தப் பையை திறந்து பார்த்தனர்.
கஞ்சா பொட்டலங்கள்
அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனடியாக அந்த பொட்டலங்களை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 15 கிலோ கஞ்சா இருந்தது.
இதுகுறித்து அந்த ரெயில் பெட்டியில் வந்தவர்களிடம் விசாரித்தனர். ஆனால், அந்த பை யாருடையது என தெரியவில்லை.
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த கஞ்சா பொட்டலங்களை உரிய விசாரணைக்குப்பின் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் விருதுநகர் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.