கஞ்சா, போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும்

திருக்கோவிலூரில் கஞ்சா, போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று 10 ரூபாய் இயக்கம் வலியுறுத்தியது.

Update: 2023-04-25 18:45 GMT

திருக்கோவிலூர்:

10 ரூபாய் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு கூட்டம் திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புறவழிச்சாலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட 10 ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஓம் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 10 ரூபாய் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமூக அலுவலர்கள் அமைப்பின் மாவட்ட செயலாளராக எம்.டேவிட்குமார், சட்ட ஆலோசகராக வக்கீல் செம்மலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடந்த கூட்டத்திற்கு ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். அஜித்குமார் வரவேற்றார். கூட்டத்தில், திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும், சந்தப்பேட்டை-கனகநந்தல் சாலையில் கருமாரியம்மன் கோவில் எதிரில் உள்ள 30 சென்ட் புறம்போக்கு இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும், திருக்கோவிலூரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வக்கீல்கள் ராஜி, சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் நகர ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்