மோட்டார் சைக்கிளில் கடத்திய கஞ்சா பறிமுதல்
ஓசூரில் மோட்டார் சைக்கிளில் கடத்திய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
ஓசூர் அட்கோ போலீசார் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 800 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.