கஞ்சா விற்ற 10 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திம்மாபுரம் மாரியப்பன் (வயது33), ஓசூர் மூர்த்தி (21), நெடுங்கல் வசந்த் (24), மடுதேப்பள்ளி கரிசித்தப்பா (45), பர்கூர் வளர்மதி (50), ராயக்கோட்டை கோவிந்தராஜ் (41), தளி மஞ்சுநாத் (36), தேன்கனிக்கோட்டை செந்தில் (48), கெலமங்கலம் முரளி (21), நாயக்கன்பட்டி சார்லஸ் (23) ஆகிய 10 பேர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.