கஞ்சா விற்ற வாலிபர் கைது

தஞ்சை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை சோலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Update: 2023-02-01 21:28 GMT

வல்லம்;

தஞ்சை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை சோலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்

தஞ்சையை அடுத்துள்ள மேலவெளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கள்ளப்பெரம்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் நேற்று மேலவெளி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது மேலவெளி அருகில் உள்ள சாய்பாபா கோவில் பின்புறம் வாலிபர் ஒருவர் மறைந்திருந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்த சிவசூரியா (வயது23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்