உடையார்பாளையம்:
உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக கருமாரி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, அம்மனை சாமி தரிசனம் செய்தனர்.