பொன்னமராவதி:
பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதி, பழனியப்பா காலனி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். அதனை தொடர்ந்து விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 201 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.