பாலமுருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
பாலமுருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் 601 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் பழனி பாதயாத்திரை குழு நிர்வாகிகள் தலைவர் ஓம் முருகா முருகேசன், செயலாளர் எஸ்.டி.காமராஜ், பொருளாளர் துர்க்கை தேனப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.