மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Update: 2023-07-26 19:00 GMT

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ேபாராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும், இதை தடுக்க தவறிய அம்மாநில பா.ஜனதா அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் நேற்று நாமக்கல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கல் காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீ.பி.வீரப்பன், புதுச்சத்திரம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மோகனூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காளப்பநாயக்கன்பட்டி

சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள வ.உ.சி திடல் அருகே சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் எருமப்பட்டி வட்டார தலைவர் தங்கராசு, காளப்பநாயக்கன்பட்டி நகர தலைவர் கணேசன், மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனை குழு உறுப்பினர் ராணி, தமிழ்நாடு மாநில மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் டாக்டர் பாலாஜி, கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கன்னியம்மாள், எருமப்பட்டி நகர தலைவர் செல்வசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்