கூடலூர் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கூடலூர் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Update: 2023-07-27 19:00 GMT

கூடலூர்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இன கலவரத்தை கண்டித்தும், 2 பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை கண்டித்தும் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட மண்வயல் பஜாரில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.கே. மணி தலைமை தாங்கினார். தொடர்ந்து கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்