புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்; போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தொடங்கி வைத்தார்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்; போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தொடங்கி வைத்தார்;

Update: 2023-10-05 22:11 GMT

மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள், 'பெண்கள் மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைபெற வேண்டும்' என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

மேலும் மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும், செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு வழியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை டாக்டர் வேலவன் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்