புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் அருகே புற்றுநோய் குறித்து பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-10 18:45 GMT

திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் பள்ளி மற்றும் பண்ணை பப்ளிக் பள்ளி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்தோஷ் மற்றும் தாளாளர் லீனா ஸ்ரீ ஸ்ரீதர், பள்ளியின் முதல்வர் ரெமி ஜோன் பசிபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முள்ளிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று புற்றுநோய் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்