புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வேளாங்கண்ணியில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

வேளாங்கண்ணியில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாசர்மிளா தொடங்கி வைத்தார். ஊர்வலமானது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம், பேராலயம், கடற்கரை சாலை, ஆரியநாட்டுதெரு, உத்திரமாதா கோவில் தெரு, செபஸ்தியார் நகர் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அவற்றின் பாதிப்புகள், எவ்வாறு தடுப்பது, சுகாதாரத்தை எவ்வாறு பேணிக்காப்பது, உணவு பழக்க வழக்கங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்