அரக்கோணத்தில் அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம் ரத்து
அரக்கோணத்தில் அறிவிக்கப்பட்ட மின்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களால் இன்றைய மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக அரக்கோணம் மின் கோட்ட செயற் பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.