சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

3-வது ரெயில் பாதையை இயக்குவதற்கான பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-06-20 02:59 GMT

சூரமங்கலம்,

செகந்திராபாத் கோட்டம் ஆசிபாபாத் சாலை - ரெச்னி சாலை ரெயில் நிலையங்களுக்கு (தெலுங்கானாவில்) இடையே 3-வது ரெயில் பாதையை இயக்குவதற்கான பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கீழ்கண்ட 10 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரெயில் (06071) வருகிற 21, 28 மற்றும் ஜூலை 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் (06072) வருகிற 24 மற்றும் 1, 8-ந் தேதியும்,

கொச்சுவேலி - இந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22646) வருகிற 22, 29 ஆகிய தேதிகளிலும், இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22645) வருகிற 24, 1-ந் தேதியும், திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22620) வருகிற 23, 30-ந் தேதியும், பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22619) வருகிற 25, 2-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22815) வருகிற 24, 1-ந் தேதியும், எர்ணாகுளம்- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22816) வருகிற 26, 3-ந் தேதியும், கொச்சுவேலி - கோர்பா எக்ஸ்பிரஸ் (22648) வருகிற 24, 27, 1, 4-ந் தேதியும், கோர்பா - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (22647) வருகிற 26, 29, 3, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்