நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே எருமப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இன்று செய்யப்பட இருந்த மின்சார நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.