பென்னாகரம் அருகேவிவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது

பென்னாகரம் அருகேவிவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2023-10-14 19:00 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே பூதிப்பட்டி காந்தி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பூதிப்பட்டி காந்தி நகரை சேர்ந்த சின்னசாமி (வயது 65), மாதம்மாள் (62) தம்பதியரின் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 அடி உயரமுள்ள 40 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னசாமியை கைது செய்தனர். தலைமறைவான மாதம்மாளை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்