பெண்கள் கடத்தலா? போலீசார் விசாரணை
பெண்கள் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர் பழைய கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் சித்திக் அலாவுதீன் மகள் ஆசிக்கா பானு (வயது 21). இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் பிடிக்க வில்லை என்று கூறி வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதேபோல் தட்டாம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகள் புவனேஸ்வரி (17). பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து 2 இளம் பெண்களை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.