இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-08 18:07 GMT

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அருகே உள்ள காயாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவரது மகள் மாரியம்மாள் (வயது 20). பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த மாரியம்மாள் நேற்று மாலை திடீரென வீட்டிலிருந்து மாயமானார். உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து கருப்பன் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாரியம்மாளை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்