வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றப்படுமா?
வளர்ந்துள்ள முட்செடிகள் அகற்றப்படுமா?
திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை செல்ல சாலை உள்ளது. இந்த சாலையில் பெரிய வாய்க்கால் அருகே இருப்புறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த சாலை வழியாக பாளையக்கோட்டை, புதுக்குடி, தென்பரை மற்றும் மன்னார்குடியிலிருந்து திருமக்கோட்டை வழியாக பஸ்களும், பட்டுக்கோட்டையில் இருந்து திருமக்கோட்டை வழியாக அரசு பஸ்களும் சென்று வருகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கும் வழிவிட்டு ஓதுங்கும் போது முட்செடிகள் கிழித்து காயமடைகின்றனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமக்கோட்டை-பாளையக்கோட்டை சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.