சேதமடைந்த வடிகால் வாய்க்கால் மதகு இடிக்கப்படுமா?

சேதமடைந்த வடிகால் வாய்க்கால் மதகு இடிக்கப்படுமா?;

Update: 2023-02-25 18:45 GMT

நன்னிலம் அருகே மூங்கில்குடி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த கிராமத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. வளப்பாற்றில் இருந்து பெரியவாய்க்கால், புளியஞ்சி வாய்க்கால்களுக்கு மூங்கில்குடியில் உள்ள வடிகால் வாய்க்கால் மதகு ஷட்டரை அடைத்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் செல்லும். மேலும் வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் இந்த மதகில் உள்ள ஷட்டரை திறந்தால் மட்டுமே தண்ணீர் வடியும். தற்போது இந்த வடிகால் வாய்க்கால் மதகு- ஷட்டர் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வடிகால் வாய்க்கால் மதகை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய மதகு கட்டித்தர வேண்டும். மேலும் சேதமடைந்த ஷட்டரையும் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்