இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார நடைபயணம்
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார நடைபயணம் நடந்தது.
செங்கம்
செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார நடைபயணம் நடைபெற்றது. செங்கம் தாலுகா செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு முத்தையன் பிரசார நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
செங்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பிரசார நடைபயணம் மேல்புழுதியூர், கரிமலைபாடி, குப்பனத்தம், பன்ரேவ், மற்றும் செங்கம் நகரில் திருவள்ளுவர் நகர் முதல் தளவாநாயக்கன் பேட்டையில் இன்று மாலை நிறைவு பெற்றது.
குறு, சிறு, நடுத்தர தொழில் முடங்கியுள்ளதாகவும், நாட்டின் விவசாயம் பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும், உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பிரசார கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.