சீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம் நடந்தது.;
சீர்காழி:
சீர்காழி திருக்கோலக்கா பகுதியில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நகர கழக செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் மணி, துணை செயலாளர் பரணிதரன், மகளிர் அணி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் கார்த்திக் வரவேற்றார் இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி பேசினர். அப்போது அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு வீடு வீடாக கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார். இந்த முகாமில் முன்னாள் நகர சபை தலைவர் இறை எழில், நகர மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில், வார்டு செயலாளர் சுரேஷ், பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.