போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த முகாம்
பந்தலூர் அரசு பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த முகாம் நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருட்கள் குறித்து ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு சிறுவர்கள் அடிமையானார்கள். போதை பொருட்களை ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். போதை பொருட்கள் பயன்படுத்துவதும், விற்பதும் குற்றம் என்றார். முன்னதாக மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதேபோல் தேவாலா அரசு உண்டு உறைவிட பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் சுசீலா தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.