மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவுக்கான மனுக்கள் பெறும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவுக்கான மனுக்கள் பெறும் முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-03-15 19:31 GMT


தமிழ்நாடு அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதி தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு அளிப்பதற்கு வசதியாக நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைவீட்டுமனை பட்டா வழங்க மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா கோரும் மனுக்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது தகுதியின்அடிப்படையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்