புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்ய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று (சனிக்கிழமை) வன்னிவயல் கிராமத்திலும், 14-ந்தேதி வழுதூர், வாலாந்தரவை ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய விரும்பும் தொழிலாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது மாற்றுச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் தெரிவித்தார்.