தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-31 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹேண்ட்இன்ஹேண்ட் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி சேர்மன் நாசர்கான் தொடங்கி வைத்தார்.

முகாமில் நகரசபை துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையர் கண்ணன், கவுன்சிலர்கள் அர்ச்சுனன், சத்யா, பிரபு, தி.மு.க. நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சங்கர், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜீவ் காந்தி, ஹேண்ட்இன்ஹேண்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்