முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர்கள் ஜானகி, தேவ பிரியதர்ஷினி, மாவட்ட திட்ட இயக்குனர் அபிதா தனிப், உதவி திட்ட அலுவலர் சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் சரவணகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் முதுகுளத்தூர் பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். 15 மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் 120-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணையம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராமசாமி, அருள் தாஸ், ராஜேஷ் கண்ணன், கமலா உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.