தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 81 இடங்களில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இதில் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.