வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2023-02-09 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சோ்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மாற்றம், நகலட்டை வேண்டுவது, செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம். 

Tags:    

மேலும் செய்திகள்