பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி கல்வி நிறுவனங்கள் சார்பில் ரத்ததான முகாம் ஆஸ்பத்திரியில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரி சங்கர் தலைமை தாங்கினார். ஸ்டான்லி கல்வி நிறுவனங்கள் தலைவர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ், இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், சிகரம் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர்கள் விக்னேஷ், சுதா, பிரபாகரன், இந்திய மருத்துவ சங்கத்தின் அரூர்-ஊத்தங்கரை கிளை நிர்வாகிகள் டாக்டர் பழனிச்சாமி, டாக்டர் ஜெயராமன், டாக்டர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி நன்றி கூறினார்.