பாலக்கோடு:
பாலக்கோடு அண்ணா அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலசண்முகம் தலைமை தாங்கினார். கால்நடை துறை உதவி இயக்குனர்கள் சண்முகசுந்தரம், மணிமாறன், கால்நடை உதவி டாக்டர்கள் தியாகசீலன், ஜெரோம் சார்லஸ், சரவணன் ஆகியோர் வெறிநோய் தடுப்பூசி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாலக்கோடு கால்நடை ஆஸ்பத்திரியில் செல்ல பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு கால்நடை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, வட்டார கல்வி அலுவலர் அன்புவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாலக்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.