தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வெண்ணாம்பட்டியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன், துணை சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், ரவிக்குமார், புகழேந்தி கணேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார்கள். இதில் குடும்ப பிரச்சினை, நிலப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 60 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.