சிங்கம்புணரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிங்கம்புணரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2022-12-10 17:47 GMT

சிங்கம்புணரி, 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய, நகர, தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவையொட்டிதனியார் நிறுவனங்களை கொண்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சிங்கம்புணரி எஸ்.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், சிங்கம்புணரி நகர அவைத் தலைவர் சிவக்குமார் ரெங்கநாதன், நகர்செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், பிரதிநிதி தருண் மெடிக்கல் புகழேந்தி, சூரக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பிரதிநிதி குடோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அமைச்சர், வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள், இளம் பெண்களை எஸ். எஸ். மெட்ரிக் பள்ளியின் தலைவர் செந்தில்குமார், தாளாளர் சந்திரசேகர், பள்ளியின் முதல்வர் ஹேமமாலினி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வரவேற்றனர். துரை ராகவன் ராமு மற்றும் காரைக்குடி நாராயணகுமார் முகாம் விளக்க உரைஆற்றினர். நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 38 நிறுவனங்கள் கலந்து கொண்டன. பட்டதாரிகள் 665 பேர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 549 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், முறையூர் பேரூராட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நாகினி செந்தில்குமார், சிங்கம்புணரி நகர துணை தலைவர் துணைச் செயலாளர் அலாவுதீன், பேரூராட்சி உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அணி செய்யது, கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஒன்றிய, நகர, தி.மு.க. மற்றும் காந்திமதி நகை மாளிகை உரிமையாளரும் தி.மு.க. அவை தலைவருமான சிவக்குமார் ரெங்கநாதன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்