குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்
குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய இன்று(சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருவது, கைபேசி எண் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையிலும் இன்று அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.