பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் உள்ள எம்.எம். கிளினிக் சார்பில் ஹெல்ப் பேஜ்இந்தியா மற்றும் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பனைக் குளம் ஊராட்சி தலைவர் பவுசியாபானு, முஸ்லிம் பரிபாலன ்சபை தலைவர், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்னுல் அஸ்லாம், செயலாளர் முகமது ரோஸ் சுல்தான், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள், ஐக்கிய முஸ்லிம் சங்கம் தலைவர் காதர்முகைதீன், செயலாளர் ஜாகிர் உசேன், வாலிபமுஸ்லிம் சங்க தலைவர் சீனி அன்வர்அலி, செயலாளர் சீனி ரிஜாஸ் கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட 340 பயனாளி களுக்கு கண் சிகிச்சை பரிசோதனை செய்யப்பட்டு 169 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. தொடர்ந்து 26 பயனாளிகள் கண் ஆபரேஷன் இலவசமாக செய்ய அரசு பஸ்மூலம் மதுரை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்பாடுகளை எம்.எம். கிளினிக் முகம்மது ஹபிபுல்லா செய்திருந்தார்.