வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காரைக்குடி,
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம், காரைக்குடி திருவள்ளுவர் கல்வி மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மதுரை காதி கிராம தொழில் ஆணைய இயக்குனர் அசோகன் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குனர் ஜி.ஆதினம் வரவேற்றார். உதவி இயக்குனர் அன்புச்செழியன், மாவட்ட மேலாளர் கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், உதவி இயக்குனர்கள் உமா சந்திரிகா, குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பேசினர்.