சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-20 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி ஹாரி ராமகிருஷ்ணன் உத்தரவின் படியும், இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் திருவள்ளூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். முகாமில் வக்கீல் சுகன்யா, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பெண் குழந்தைகள், பெண்களுக்கான சட்டம் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர்.மக்கள் நல பொறுப்பாளர் அழகுமுத்து நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு இளவரசன் செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்