மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.
கமுதி,
அபிராமம் பேரூராட்சியில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், ஒன்று முதல் 7 வரையிலான வார்டு பொது மக்கள், தங்களது குடும்ப அட்டையில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், முகவரி மாற்றம், கைரேகை பதிவா காத கார்டுகள் போன்றவை சம்பந்தமாக தீர்வு உடனடியாக காணப்பட்டது. இந்த சிறப்பு முகாமிற்கு அபிராமம் பேரூ ராட்சி தலைவர் பாத்திமாகனி தலைமை தாங்கினார். தி.மு.க. நகர் செயலாளர் ஜாகீர்உசேன், பேரூராட்சி துணைத் தலைவர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூர் மகளிரணி மீனலோசனி ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமிற்கு வந்த பயனாளி களின் குறைகளை வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், வருவாய் ஆய்வாளர்கள் முனியசாமி, கலாராணி ஆகியோர் கேட்டறிந்து தீர்வு அளித்தனர். இதில் 59 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.