சிவகங்கை,
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி, கண்காணிப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரக்பி, ரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் கங்கா லட்சுமி, டாக்டர் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர்.