சாயல்குடி,
கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம், மண்வள அட்டை இயக்கம் திட்டத்தின் மூலம் மாதிரி கிராமமான சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கினார். கடலாடி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, பரமக்குடி வேளாண்மை அலுவலர் கீர்த்தனா, பரமக்குடி வேளாண்மை அலுவலர் மதுமிதா, துணை வேளாண்மை அலுவலர் குமரப்பன், உதவி வேளாண்மை அலுவலர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஊட்டமேற்றிய உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் மேலச் செல்வனூர் ஊராட்சி தலைவர் மகரஜோதி கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார். பயிற்சியில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.